(ஷமி.மண்டூர்) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மகிழுர்முனை பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை 12 திகதி இடம்பெற்றுள்ளது
இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில் மகிழுர்முனை பிரதான வீதியில் வசிக்கும் மேசன்தொழில் புரியும் இ.ருஜிதன் 18 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டில் புதன்கிழமை இரவு தூக்கில் தொங்கியநிலையில்யாரும் காணவில்லை எனவும் வியாழக்கிழமையே உறவினர்கள் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்டதாக தெரியவருகிறது இதுதொடர்பாக களுவாஞ்சிக்குடிப்பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்













