விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் வெபர் விளையாட்டு மைதானத்தைப் பார்வையிட்டார்

(சிவம் ) விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எம்.எம்.எம். ஹாரிஸ் நேற்று வியாழக்கிழமை (12) மட்டக்களபபபு நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெபர் விளையாட்டு மைதானத்தைப் பார்வையிட்டார்.

பார்வையிட்ட பின்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விளையாட்டு மைதானத்தில் உள்ள குறைபாடுகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்கான குழுக்களை அமைத்தல் பற்ற கலந்துரையாடப்பட்டன.


இதன்போது தற்போது விளையாட்டு மைதானத்தில் 400 மீற்றர் ஓடுபாதை உள்ள நிலையில் மேலும் 100 மீற்றரை மேலதிகமாக சேர்ப்பதற்கான முன்மொழிவை விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் பிரதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், அமைச்சின் பணிப்பாளர் நாயகம்,  பொறியியலாளர் ரி. தேவதீபன்,  கணக்காளர் எ. ஜோண்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.