ஓசாணம் விசேட தேவையுடையவர்களின் கலை நிகழ்வுகளும் கண்காட்சியும்

(சிவம் )

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஓசாணம் விசேட தேவையுடைய பிள்ளைகளின்  கலை நிகழ்வுகள் மற்றும் கைப்பணிப்பொருட்களின் கண்காட்சி    வியாழக்கிழமை மாலை (26) மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்றது.


சுனேரா பவுண்டேசன் அனுசரணையில் பயிற்றுவிக்கப்பட்ட ஓசாணம் விசேட தேவையுடைய பிள்ளைகளின்  நடனம், வீதி நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் ஓசாணத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களினால் நடாத்தப்பட்டன.

விசேட தேவையுடையவர்களினால் துணிகள் , பன்புல் மற்றும் களிவுப்பொருட்களினால் செய்யப்பட்ட கைப்பணிப்பொருட்கள் மற்றும் திராட்சைப் பழ இரசம் போன்ற பொருட்களின் கண்காட்சியை சுனேரா பவுண்டேசன் பணிப்பாளர் சுனேத்திரா பண்டாரநாயக்கா ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சுனேரா பவுண்டேசன் இணைப்பாளர் ஜி. தம்மிக்க, ஓசாணம் விசேட தேவையுடையவர்கள் இல்ல பொறுப்பாளர் அருட்சகோதரி அமிர்தராணி சேவியர், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.