(சுகிவர்ணன்)மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சுக நேய நிலையத்தினால் (Health Friendly Center - STD CLINIC சந்திவௌி பிரதேசத்தில் பாலியல் நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று 20ம் திகதி இடம்பெற்றது.
வைத்திய கலாநிதி திருமதி அ.சிறிசங்கர் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி(HIV) நோய் பரவுதல் தொடர்பாக தொளிவுபடுத்தும் விதமாக இந் நிகழ்வின்போது பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பொது சுகாதாரப் பரிசோதகர் (Health Friendly Center - STD CLINIC) எம்.தயாளன் மற்றும் இப் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது சுமார் 65 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
















