
(ரவிப்ரியா )
அரசின் புதிய கல்வி சீர்திருத்தத்திற்கமைய தரம் 1 மாணவர்களுக்கான கல்வி திட்டம் 2016ல் இருந்து புதிய திட்டத்திற்கமைய அமுல்படுத்தப்பட இருக்கின்றது. இதற்கான ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கை பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள தரம் 1க்கு கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கு இரு கட்டங்களாக 105 ஆசிரயர்களுக்கு நடாத்தப்பட இருக்கின்றது. முதற்கட்டத்திற்கான பயிற்சிக் கருத்தரங்கு போரதீவு பற்று பாடசாலைகளில் தரம் 1க்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய மண்டபத்தில் ஞாயிறு 20ந் திகதி தொடக்கம் 23ந் திகதி வரை நடாத்தப்பட இருப்பதாக ஆரம்ப கல்வி உதவிப் பணிப்பாளர் வி.வரதராஜன் தெரிவித்தார்.
இப் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் மட்டுமே தரம் 1 மாணவர்களுக்கு 2016ல் கல்வி கற்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து உத்தியோக ரீதியாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும். இதுவரை கடிதத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உடன் தன்னோடு தொடர்பு கொண்டு பயிற்சியில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.












