10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

(சுபஜன் )
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை மைலம்பாவளி சவுக்கடி வீதியைச் சேர்ந்த பிரேமசந்திரன் ஜெனிஸ்வரன் (வயது 10 )என்ற சிறுவனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சம்பவம் நேற்று (19) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தேவாலயம் ஒன்றிற்கு சென்றிருந்த குறித்த சிறுவனின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் வீடு திரும்புகையில் சிறுவன் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.  மைலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வாரா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றர்.