கிண்ணியா ஏ.ஸீ.எம். முஸ் இல் இன் தேடலில் கிண்ணியாவின் முதல்வர்கள் தொகுதி-1 நூல் வெளியீட்டு விழா .20 ஆம் திகதி இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கிண்ணியா அல்- அக்ஷா கல்லூரி மகரூப் கலையரங்கில் இடம் பெற்றது..
கிண்ணியா குரல் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்விற்கு ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.சரீப் தலைமை வகித்திருந்தார்.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிண்ணியா தள வைத்திய சாலை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எச்.சமீம், விசேட விருந்தினராக கிண்ணியா குரல் பதிப்பகம் ஆசிரியர் .எம்.நியாஸ், கலந்து கொண்டிருந்தனர்.
இதில் நூல் நயவுரையை கலாநிதி கலாபூசணம் கே.எம்.இக்பாலும், வாழத்துப்பா கலாபூசணம் ஏ.எம்.எம்.அலி, மேற் கொண்டிருந்தனர்.












