2016ல் குழிகள், மணல்கள் நிவர்த்தி செய்யப்பட்டு பயணிகள் பயணிக்கும் வீதிகளா மாற்றமடையுமா?

(படுவான் பாலகன்)  படுவான்கரைப்பிரதேசத்தில் காணப்படும்  வீதிகள் பல உடைந்து மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் இருந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

அவ்வகையில் பட்டிப்பளைப்பிரதேசத்திற்குட்பட்ட குளுவினமடு வீதி, வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட சாமந்தியாறு தொடக்கம் உன்னிச்சை வரையான வீதிகள் மிகவும் உடைந்த நிலையில் உள்ளதாக குறிப்பிடுகின்றனர். இவ் வீதிகளில் இடப்பட்டிருந்த கிறவல்கள் நீரினால் அடித்து செல்லப்பட்டு  வெறும் மணலாக காட்சியளிக்கின்றது. இன்னும் சில வீதிகள் பாரிய குழிகளாக காணப்படுகின்றது. இதனால் மக்கள் வயல்களின் ஊடாக பயணம் செய்கின்ற நிலையும் வாகனங்களை மணலால் உருண்டி செல்கின்ற நிலையும் உள்ளதாக  பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதிகள் அதிகளவில் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதுடன் பிரதான வீதிகளாகவும் அதிகளவில் மக்கள் பயணம் செய்கின்ற வீதிகளாகவும் அமைந்திருக்கின்றது. இது போன்று இன்னும் உள்ளுர் வீதிகள்  உடைந்த நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். 

எனவே மலர இருக்கின்ற 2016ம் ஆண்டில் இவ்வாறான வீதிகள் தொடர்பில் உரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் இது தொடர்பில் கவனமெடுத்து நீண்டு நிலைக்க கூடிய வீதிகளாக அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.