தேசிய மட்டத்தில் சாதனை படைத்த பாடசாலைகளின் சாதனையாளர் பாராட்டு விழா

(சிவம்)

மாணவர்கள் தேசிய மட்டத்தில் பெற்ற சாதனைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு அப்பால் பின்புறத்தில் மின்சாரம், நீர் வழங்கல் உட்பட அத்தியாவசிய சேவைகள் துறைசார்  அனைவரும் உதவி புரிந்துள்ளனர் என மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் தெரிவித்தார்.


தேசிய மட்டத்தில் சாதனை படைத்த பாடசாலைகளின் சாதனையாளர் பாராட்டு விழா 2015 இன்று சனிக்கிழமை (05) மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறியதாவது


மாணவர்கள் வெற்றியை கண்டு மகிழ்வது போல் தோல்வியையும் ஒருமனதோடு ஏற்கும் பக்குவத்திற்கு தங்களைப் பழக்கிக் கொள்ள வேண்டும் அப்போது தான் வாழ்க்ககையில் முகம் கொடுக்கும் சவால்களை வெற்றி கொள்முடியும் மாறாக தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தோல்லியின் அடுத்த படி வெற்றியே. எல்லா மாணவர்களிமும் வெவ்வேறு வகையான திறமைகள் உள்வாங்கபட்டுள்ளன. அவற்றை பெற்றோரும் ஆசிரியர்களும் இனங்கண்டு அவர்களது துறைசார் கல்வியை முன்னெடுக்க வேண்டும்.

அரசு கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்ததன் மூலம் அரச வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே யாபேரும் தங்களது கடமைகளை செம்மையாகச் செய்வதன் மூலம் வெற்றிப்படியை இலகுவாக எட்ட முடியும். இந்த மாணவர்கள் சிறந்த அடைவு மட்டங்களைப் பெறுவதற்கு ஏதுவாக அமையும் எனத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாம், மட்டக்களப்பு மின்சார சபையின் பிரதம பொறியியலாளர் பி. அனிதா, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் எந்திரி கே. வினோதன், மட்டக்களப்பு மாநகர சபையின் பொறியியலாளர் ரி. தேவதீபன், வலய மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.