
சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மண்முனை வடக்கு பிரதேசத்தின் ஜெயந்திபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடந்த 8ம் திகதி இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வானது ஜெயந்திபுரம் கிராம சேவகர் பிரவில் இயங்கும் 'வானவில்' சிறுவர் கழகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.சி.உதயராஜ் அவர்களால் நடாத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வு கருத்தரங்கானது நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், ஜெயந்திபுரம் கிராம மட்ட சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழு ((VCRMC) மற்றும் ESCO நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

















