பட்டிருப்பு கல்வி வலயத்தில் க.பொ.த (சா.த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

 (ரவிப்ரியா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து இவ்வாரம் ஆரம்பிக்க இருக்கும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கணித பாடத்திற்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு செவ்வாயன்று (01) பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் ஈ வெஸ்ற் கம்பசின் முழு அனுசரயையுடன்  அதிபர் கே.தம்பிராசா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பட்டிருப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (கணிதம்)  எஸ். நவஅன்னபாரதி கலந்து கொண்டார்.

500 பேருக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இக் கருத்தரங்கின் பிரதம வளவாளராக பிரபல கணித ஆசிரியர் கே.இராதாகிருஷ்ணன் கருத்தரங்கை நடாத்தினார். இணை வளவாளர்களாக ஈ வெஸ்ற் கம்பஸ் வளவாளர் ஏ.எம்.எம் ஜஹான் இ மற்றும் ;எம்.வி.முனிரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.எம்.முஹமட் ஜவ்பர் கருத்தரங்கின் நோக்கம் பற்றியும்இ நிறுவனத்தின் செயற் திட்டங்கள் குறித்தம் தெளிவுபடுத்தினார்.
மாணவர்கள் பரீட்சை எழுத பயப்படுகின்ற பாடம் கணித பாடமாகும். எனினும் முக்கிய பாடமாகும். தேசிய ரீதியில் மாணவர்களின் தேர்ச்சி வீதம் குறைந்த பாடமும் இதுவாகும். எனவே மாணவர்களிடையே பாடம் பற்றிய அச்ச உணர்வை நீக்குவதற்கும். அவர்கள் குறித்த பாடத்தில் தேறுவதற்கும் அடிகோலும் அத்துடன் இத்தகைய கருத்தரங்குகள் தொடர்ந்து நடாத்தப்பட வேண்டும் என்றும்; என கருததரங்கிற்கு தலைமை வகித்துப் பேசிய அதிபர் கே.தம்பிராசா தெரிவித்தார்.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் தனதுரையில்இ கணிதம் ஒரு கட்டாய பாடமாகும். 2ந் திகதியிலிருந்த இத்தகைய கருத்தரங்குகள் எதுவும் நடாத்த முடியாது இந்நிலையில் இந்தக் கருத்தரங்கை இறுதிநேரத்தில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாதிரி வினாக்கள் தரம் வாயந்தவையாகக் காணப்படுகின்றது. எனவே மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு இலகுவாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மிகுந்த சிரமத்தின் மத்தியில் நிதிச் செலவில்  இக் கருத்தரங்கை நடாத்திய ஈ வெஸ்ற் கம்பஸ் பாராட்டுக்குரியது.
இத்தகைய கருத்தரங்குகளை அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பாத்திமா கல்லூரியிலும்இஇ கல்முனை பாலிகா வித்தியாலயத்திலும்இ நாவிதன்வெளி விவேகானந்தா வித்தியாலயத்திலும ஈ வெஸ்ற் கம்பஸ்; நடாத்தியது குறிப்பிடத்தக்கது.