கல்லாறு வை.எம்.சி.ஏ யின் ஒளி விழா


(ரவிப்ரியா)
கல்லாறு வை.எம்.சி.ஏ யின் ஒளி விழா சனியன்று காலை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஏ.அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக தேற்றாத்தீவு யூதா ததேயு திருத்தலம் - அருட்தந்தை நிர்மல் சூசை கலந்து கொண்டார்;. சிறப்பு விருந்தினர்களாக கல்லாறு மெதடிஸ்த திருச்சபை முகாமைக் குரு அருட்திரு எஸ்.சசிகுமார், பெரியநீலாவணை சி.ஏசி.எம் அருட்திர அன்ரனி சுதாகர், கெத்சமே கொஸ்பல் ஆலய பாஸ்ரர் ஏ.அமலதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சபை மாணவர்களின் நடன நிகழ்வுகளும். சிறப்புரைகளும். ஒளி விழாவின் தத்துதவத்தை நன்கு வெளிப்படுத்தியது. நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்ச்சித் தொகுப்பாளரின், கிறிஸ்மஸ் துல்லியமான இரத்தினச் சுருக்கமான தகவல்களுடன் கூடிய வித்தியாசமான, திறமையான  தொகுப்பால் ; பார்வையாளர்கள் ஒளி விழாவுடன் ஒன்றிப்போனது சிறப்பம்சமாகும். பொதுச் செயலாளர் செல்வி டி.ஜே.சிறிஸரினாவின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.