மத்தியமுகாம் பிரதேசத்தில் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து இளைஞர் சிரம சக்தி வேலைத் திட்டத்தின் கீழ் மத்தியமுகாம்-02 அருள் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் பஸ் தரிப்பிட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 30ம் திகதி நடைபெற்றது.
நாவிதன்வெளி இளைஞர் சேவைகள் அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், சம்மாந்துறைதொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.லிகிர்தன், அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.முபாரக் அலி, நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ரீ.மோகனகுமார், நாவிதன்வெளி பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிறிநாதன், முன்னாள் நாவிதன்வெளி இளைஞர் பாராளுமன்ற பிரதி அமைச்சர் ரீ.சுதன், கிராமசேவை உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள்இ இளைஞர் கழங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.












