(சுபஜன் செங்கலடி)
செங்கலடி புனித நிக்கொலாஸ் ஆலய கிறிஸ்து பிறப்பு ஒளி விழா இன்று (20) ஆலய கலையரங்கில் மாலை 3.00 மணியளவில் பங்குத்தந்தை அருட்பணி G.மகிமைதாஸ் அடிகளார் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக அருட்பணி இருதயராஜ் , செமஸ்கன் சபை அருட்சகோதரிகள், செங்கலடி பங்கு அருட்சகோதரிகள் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் என்போர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பங்கு மக்களின் ஏற்பாட்டில் கிறிஸ்த்து பிறப்பை பிரதிபலிக்கும் நாடகங்கள், பாடல்கள் என்பனவும் இடம்பெற்றன.




























