தேற்றாத்தீவு கொம்புச்சந்தியில் வாகன விபத்து

 களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை இரவு பிக்கப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில்   இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர் .

களுவாஞ்சிக்குடியை சேர்ந்த எஸ்.யதுசன் (வயது 22), திருப்பழுகாமத்தைச் சேர்ந்த கே.தர்மகீர்த்தி (வயது 21) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.