- ஹுஸைன்இலஞ்சம் பெறுதலுக்கெதிரான சர்வதேச தினத்தில் கிழக்கு மாகாண சபையில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டனர்.
நான் இலஞ்சம் கொடுக்கவோ பெறவோ மாட்டேன் என்பதுடன் இலஞ்சம் சம்பந்தமான முறைகேடான நடத்தைகள் பற்றி தகவல் வழங்கி அறிவிப்பேன் I declare: I shall not pay a
என்ற உறுதி மொழிகளுடன் இந்த சர்வதேச இலஞ்சத்துக்கெதிரான தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை பேரவைச் செயலக செயலாளர் எம்.சீ.எம். ஷெரீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் அப்துல் அஸீஸ், பேரவைச் செயலக உதவிச் செயலாளர் யூ. சிவராஜா உள்ளிட்ட அதிகாரிகளும் மாகாண சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.















