மட்டக்களப்பில் பல இடங்களில் நாளைமுதல் மின்வெட்டு

இலங்கை மின்சாரசபையின் பராமரிப்பு வேலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை முதல் 04 தினங்களுக்கு மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. 

நாளை வெள்ளிக்கிழமை காக்காச்சிவட்டை, சின்னவத்தை, பலாச்சோலை ஆகிய இடங்களிலும் ,


சனிக்கிழமை  மட்டக்களப்பு நகர பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகரசபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி, லேக் வீதி ஆகிய இடங்களிலும், 

எதிர்வரும்  21ஆம் திகதி  குறுமண்வெளி, மகிழூர், எருவில் ஆகிய இடங்களிலும்,

எதிர்வரும் 22ஆம் திகதி வட்டவான், காயான்கேணி, மாங்கேணி, பனிச்சங்கேணி, வாகரை, மருதங்கேணி, தட்டுமுனை ஆகிய இடங்களிலும் ,

காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்தது.