பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் பெண்கள் பாடசாலையின் கணனி கூடம் புதனன்று காலை 11 மணியளவில் பாடசாலை அதிபர் எம்.சந்திரசேகரம் தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர் வி.திரவியராஜாவினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கொய்க்கா நிறுவனம் இதற்கான நிதியுதவியை அளித்துள்ளது. 13 கணனித் தொகுதிகள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் கல்லாறு மெதடிஸ்த திரு அவையின் போதகர் எஸ். சசிகுமார்இ கிறிஸ்தவசபை பாஸ்ரர் டேவிட், பாஸ்ரர் அமலதாஸ், ஆசிரிய ஆலோசகர் எஸ்.யோகராசா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் க.கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிதிகள் பாண்டு வாத்தியமூலம் அழைத்துவரப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
தேசிய ரீதியல் நடைபெற்ற இன்றைய வேலை நிறுத்தம் விழா நேரத்தில் தாக்கத்தைச் செலுத்தியது. காலை 8.30க்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டபோதும், காலை 11.00 மணியளவிலேயே விழா ஆரமபமானது குறித்து பெற்றோர் பொறுமையிழந்து காணப்படடனர். அதே தினத்தில் பல பாடசாலைகளில் விழாக்கள் ஏற்பாடு செய்யபபட்டதும், தேசிய ரீதியல் நடைபெற்ற வேலை நிறுத்தமும், எல்லாப் பாடசாலைகளையும் திருப்திப்படுத்தப்பட வேண்டிய கடப்பாடுமே தாமதத்திற்கு காரணமென கோட்டக்கல்விப் பணிப்பாளர் பெற்றோரைச் சாந்தப்படுத்தினார்.












