பாலியல் இனவிருத்தி சுகாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பான சைகை மொழி சொற்களஞ்சியம் வெளியீடு

-ஹுஸைன் )

அங்கவீனர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பாலியல் இனவிருத்தி சுகாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பாக 'வை பியர்' (Y-PEER) இளைஞர் கல்வியூட்டல் சமவயதுக் கல்வியாளர்கள் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சைகை மொழி சொற்களஞ்சியம் இலங்கையில் முதன்முறையாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

அங்கவீனர்களுக்கான சர்வதேச தின தேசிய வைபவம் கண்டி பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்விலேயே ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (United Nations Population Fund மற்றும் சமூக வலுவூட்டல் நலனோம்புகை அமைச்சின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட அங்கவீனர்களுக்கான பாலியல் இனவிருத்தி சுகாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பான சைகை மொழி சொற்களஞ்சியம் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவல, மத்திய மாகாண சமூக நலனோம்புகை, நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புச் சேவை அமைச்சர் பந்துல எஸ்.பி. யாலேகம, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பகுப்பாய்வாளர் நிஸாந்த வர்ணசூரிய, சமவயதுக் கல்வியாளர்கள் அமைப்பின் மாவட்ட பயிற்றுவிப்பாளர்களான எஸ். கிருஷாந்தி, முஹம்மத் அன்பாஸ் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் பொதுமக்களும் விஷேட தேவையுள்ளோரும் கல்வியாளர்களும் கலந்து கொண்டனர்.