கடை உடைக்கப்பட்டு திருட்டு - பெண்ணொருவரின் சங்கிலியும் சூறையாடப்பட்டது

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் 04ஆம் வட்டாரத்திலுள்ள பலசரக்குக் கடையொன்று  ஞாயிற்றுக்கிழமை(27) இரவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தோப்பூர் பொலிஸில்  அக்கடை உரிமையாளர் திங்கட்கிழமை(28) முறைப்பாடு செய்துள்ளார்.

கைபேசி மீள்நிரப்பு அட்டைகள், பணம் ஆகியவற்றுடன், கடை உரிமையாளரின் மனைவி அணிந்திருந்த முக்கால் பவுண் தங்கச்சங்கிலியையும் திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

கடைக்கு பின்னால் தனது வீடு இருந்தமையினால் மனைவியின் சங்கிலியை திருடர்கள் அறுத்துச்செல்ல நேரிட்டது. திருடர்கள் கொண்டுவந்த கத்தியொன்றையும் கடையில் விட்டுச் சென்றுள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்தார். இத்திருட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.