மண்முனை மேற்கில் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நிகழ்வு

(சுகிவர்ணன்)
தேசிய உற்பத்தித்திறன் செயலகம் மண்முனை மேற்கு பிரதேச செயகத்தினூடாக அப் பிரதேச அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்காக உற்பத்தித்திறன் பற்றிய இரண்டுநாள் கருத்தரங்கு மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது.


கடந்த 3ம்,4ம் திகதிகளில் இடம்பெற்ற இக் கருத்தரங்கின் போது விளக்கமளிப்பு மற்றும் வவிரிவுரைகளை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் வழங்கினார்.


சிறந்த உற்பத்தித்திறன் செயற்றிட்டம் மூலம் மக்களுக்கு திறன்மிக்க சேவையினை வழங்கமுடியும், இவ் உற்பத்தித்திறன் சிறந்தமுறையில் செயற்பட்டால் அவ் அலுவலகம், அப்பிரதேசம், அம்மாவட்டத்துடன் நாடும் முன்னேற்றமடையும் என்பதற்கிணங்க இந் நிகழ்வு அமைந்திருந்தது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு மற்றும் அரச திணைக்களங்களைச்சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.