ஆசி­ரியர் பயிற்­சிக் கல்­லூரிக்கு விண்­ணப்­பிக்கும் இறுதித் திகதி

நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள ஆசி­ரியர் கல்­லூ­ரி­களில் இரு­வ­ருட ஆசி­ரிய பயிற்சி நெறிக்கு விண்­ணப்­பிக்கும் இறுதி நாள் நாளை 28ம் திக­தி­யாகும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் கல்­வி­ய­மைச்­சினால் ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. கணிதம், விஞ்­ஞானம்,  ஆரம்பக் கல்வி, சமூ­க­வியல், விவ­வ­சாயம், மனை­யியல், சங்­கீதம், சித்­திரம், அரபு, இஸ்லாம், இந்து சமயம், கிறி­ஸ­தவம், நடனம், விஷே­ட­கல்வி, தமிழ், வணிகம், உடற்­கல்வி .... உள்­ளிட்ட 22 பாநெ­றி­க­ளுக்கு ஆசி­ரி­யர்கள் விண்­ணப்­பிக்க முடியும்.

ஆசி­ரியர் கல்­லூ­ரி­களில் காணப்­படும் வெற்­றி­டத்­திற்­கேற்ப, பாட­சா­லை­களில் ஆசி­ரி­யர்கள் கட­மை­யேற்­றதன் முன்­னு­ரி­மையின் அடிப்­ப­டையில் தெரிவு மேற்­கொள்­ளப்­படும். ஏதா­வ­தொரு பாட­நெ­றிக்கு, போது­மா­ன­ளவு விண்­ணப்­ப­தா­ரிகள் இல்­லா­தி­ருப்பின் அப்­பா­ட­நெ­றியை நடாத்­து­வது, அல்­லது நடத்­தா­தி­ருப்­பது குறித்து கல்­வி­ய­மைச்சின் செய­லாளர் தீர்­மா­னிப்பார்.

யாழ்ப்­பாணம், அட்­டா­ளைச்சேனை, மட்­டக்­க­ளப்பு உள்­ளிட்ட நாட்­டி­லுள்ள 07 ஆசி­ரியர் கல்­லூ­ரி­க­ளுக்கு விண்­ணப்­பிக்க முடியும். அர­சாங்கப் பாட­சா­லை­களில் சேவை­யாற்றும் ஆசி­ரி­யர்கள் 2015.11.27ம் திகதி குறைந்­தது மூன்று மாத­கால சேவையை பூர்த்தி செய்­த­வ­ராக இருத்தல் வேண்டும். விண்­ணப்­ப­தா­ரிகள் தமது நிய­ம­னத்தின் தன்­மையை முதல் நிய­மனக் கடி­தத்தின் மூலம் உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

அர­சாங்க சேவை ஆணைக்­குழு அல்­லது கல்விச் சேவைகள் ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் அல்­லது மாகாண அரச சேவைகள் ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் கையொப்­பத்­துடன் முறை­யான நிய­ம­னத்தைப் பெற்று அர­சாங்கப் பாட­சா­லை­களில் கட­மை­யாற்றும் பயிற்­றப்­ப­டாத ஆசி­ரி­யர்கள்,

கல்­வி­ய­மைச்சின் தனியார் பாட­சா­லை­களின் பணிப்­பா­ளரால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட தனியார் பாட­சா­லை­களின் பெயர்ப்­பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள மற்றும் மாகாணக் கல்­விப்­ப­ணிப்­பாளர் அனு­ம­தி­ய­ளித்­துள்ள நிய­ம­னங்­களைக் கொண்­டுள்ள ஆசி­ரி­யர்கள், மஹ­ர­கம தேசிய கல்வி நிறு­வ­கத்­தினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட தொலைக்­கல்வி அல்­லது பிரின்செட் அல்­லது பட்­ட­தா­ரி­யல்­லாத பயிற்­றப்­ப­டாத ஆசி­ரி­யர்­களைப் பயிற்­று­விக்கும் வார இறுதி பாட­நெ­றியில் ஆசி­ரியர் பயிற்­சியை மேற்­கொண்டு சித்­தி­பெ­ற­வில்­லை­யென தொலைக்­கல்வி ஆசி­ரியர் பயிற்சி அதி­கா­ரி­களால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஆசி­ரி­யர்கள்,

கல்­வி­ய­மைச்சின் பிரி­வெனா கல்விப் பிரிவில் பதிவு செய்­யப்­பட்­டடு மாகாணக் கல்விப் பணிப்­பா­ளரால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிய­ம­னங்­களைக் கொண்ட பிரி­வெனா ஆசி­ரி­யர்கள் ஆகியோர் இதற்கு விண்­ணப்­பிக்க முடியும்.

ஆசி­ரி­யர்கள் முறை­யாகப் பூர்த்தி செய்­யப்­பட்ட விண்­ணப்­பத்­தினை, பணிப்­பாளர், ஆசி­ரியர் கல்வி நிர்வாகப் பிரிவு, கல்வி அமைச்சு, இசுருபாய என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை தாங்கிவரும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் 'ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியைப் பின்பற்றுவதற்காக ஆசிரி யர்களைத் தெரிவு செய்தல் - 2016,2017' எனக்குறிப்படுதல் வேண்டும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.