(கதிரவன்)இலங்கை வங்கி கிழக்கு பிராந்திய கடன் வழங்கும் நிலையம் 18.12.2015 அன்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை தபால் நிலைய வீதியில் திறந்து வைக்கப்பட்டது. வங்கியின் பிரதி பொது முகாமையாளர் திருமதி சந்திராணி ஜயவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.



















