
சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மனித செயற்பாடுகளே அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணமென அனர்த்த முகாமைத்துவ ஆர்வலர் எஸ். ரமேஸ்வரன் தெரிவித்தார்.
காடுகளை அழித்தல், குப்பைகளை எரித்தல் மற்றும் பொலித்தீன் பாவனை போன்ற செயற்பாடுகளினால் சூழல் மாசடைந்து பூகோளம் வெப்;படைடுகிறது. இதனால் கடலின் நீர் மட்டம் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வேள்ட் விஷன் லங்கா கிரான் ஏடிபி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களுக்கான பயிற்சிப்பட்டறையில் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்கையிலேயே அவர் இதனைக் கூறிப்பிட்டார்.
மட்டக்களப்பு -கிரான் பிரதேச செயலகத்திற்குற்பட்ட சந்திவெளி, கிரான் கிழக்கு, பாலையடித்தோணா மற்றும் பூலாக்காடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ குழுக்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் கிரான் பிரதேசத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.
வேள்ட் விஷன் லங்கா கிரான் ஏடிபி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ரொபர்ட் அகிலானந்தன் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

















