அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம் 02இல் 08 வயதுடைய சிறுவனொருவன், ஊஞ்சலுக்காக போட்ட சணல் கயிற்றில் இறுகி நேற்று வெள்ளிக்கிழமை (04) காலை பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன், சணல் கயிறு ஒன்றினால் வீட்டுக்கு அருகில் இருந்த மரமொன்றில் ஊஞ்சல் கட்டி விளையாடிய போது, தவறுதலாக கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கியமையே இவ் உயிரிழப்புக்கு காரணம் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் தாய், வீட்டினுள் மதிய சமையல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும் பின்னர், உணவு வழங்குவதற்காக வெளியில் வந்து பார்த்தபோதே இவ்வாறு நடைபெற்றுள்ளதை அவதானித்துள்ளதாகவும், அயலவர்களின் உதவியோடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம், மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.