தன்னாமுனை புனித வளனார் பாடசாலையின் புதிய தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

(Esther)
மட்-தன்னாமுனை புனித வளனார் மகா வித்தயத்தில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று 14 பாடசாலை அதிபர் திரு.S.மங்களசந்திரா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்குப்
பிரதம அதிதியாக கோட்டைக்கல்வி அதிகாரி திரு.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார். தரம் 1 புதிய மாணவர்கள் பேண்ட் வாத்தியங்களுடன்  பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு 2ம் ஆண்டு மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.