(ஜெ.ஜெய்ஷிகன்)
இம்முறை (2015) நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் வாகரைக் கோட்டத்தில், பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முதன்மைப்பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
2015 இல் ஆறு மாணவர்கள் தோற்றி அறுவரும் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்குரிய அடிப்படைத் தகுதிகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் மூவர் பல்கலைக்கழகம் சென்று கற்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். குறிப்பாக பத்மநாதன் தனுஸ்காந் ‘ஏ2பி’ மாவட்ட நிலை 29,கணபதிப்பிள்ளை சிவநிலா ‘ஏபிசி’ மாவட்ட நிலை 163, சித்திரவேல் நிலோஜினி ‘ஏபிசி’ மாவட்ட நிலை 182 இனையும் பெற்று பாடசாலைச் சமூகத்திற்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் இருந்து 72 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இப்பாடசாலையில்; 2011இல் ஆரம்பிக்கப்பட்ட உயர்தரக் கலைப்பிரிவிலிருந்து, தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே ஒரு அதிகஸ்ரப் பிரதேசப் பாடசாலை இது என்பதும், சென்ற (2014) வருடமும்; ‘3ஏ’ பெற்று மாவட்டத்தில் 3 ஆம் நிலையினைப் பெற்று மாணவர் ஒருவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானமையும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் போராலுமம்; நில அதிர்வுப் பேரலையாலும் (சுனாமி) தொடர் வறுமையாலும் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் போருக்குப் பின்னரான வடுக்களையும் தாங்கி மிகுந்த வறுமை நிலையிலும் கற்றல் வளங்கள் மிகக் குறைவான நிலையிலும் இவ்வாறான கல்வி முன்னெடுப்புக்கள் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டி எழுப்பும் எனவும் புத்தி ஜீவிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இது அறிந்துää கல்குடா கல்வி வலய பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிறிஸ்ணராஜா அவர்கள் பாடசாலைக்கு நேரடியாக வந்துää அதிபர் பொன்.இராமச்சநிரன் மற்றும் கற்பித்த த.உதயகுமார், எ.ஜெயரஞ்சித்ää திருமதி.பிரியதர்சினி சதீஸ் ஆசிரியர்களையும்; மாணவர்களையும்; பாராட்டியதுடனää; “நாமாக நிகழ்த்தும் மாற்றங்களுக்குப் பெயர்தான் சாதனை என்றும் நகர்ப்புறத்துக்கு அப்பாலும் சாதனைகள் வெளிவருவதற்கு இப்பாடசாலையும் ஒரு முன்னுதாரணம்” என்றும் கூறி சாதனையாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

















