இலங்கை வாழ் மக்களுக்கு புதியதொரு பொருளாதார மற்றும் சமுதாயப் பாதையினைத் திறந்து இன்றைய நாளைவிட சிறந்த நாளைய தினத்தினை நிர்மானிப்பதற்காக பணியாற்றும் மனோ நிலையில் மாற்றத்தினை சகல அரச உத்தியோகத்தர்களுள்ளும் ஏற்படுத்தும் அவசியத்தினை தெளிவுபடுத்தும் முதல் நாள் நிகழ்வு இன்று காலை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.செ.ஸ்ரீகிருஷ்ணராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் சகல பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்.உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் , சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள். கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,முகாமைத்துவ உதவியாளர்கள், சிற்றூழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு 2016 ஆம் ஆண்டின் கல்வி அபிவிருத்தியில் பங்கெடுக்கும் அனைத்து மாணவர்கள் ,ஆசிரியர்கள், அதிபர்கள் பெற்றோர்களுக்கு சிறந்த அனுபவத்துடனான அர்ப்பணிப்பான சேவையை ஆற்றுவோமென சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.












