அம்பாறையில் உயிரியல் துறையில் கல்முனை மாணவன் முதலிடம்

 க.பொ.த. (உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின் படி  கார்மேல் பாத்திமா கல்லூரி மாணவன் மயில்வாகனம் சாருஜன் உயர் தர விஞ்ஞான பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 12வது இடத்தையும்   பெற்றுள்ளார்.

இவர்  வி.மயில்வாகனம் (கல்முனை வலய பிரதி பணிப்பாளர்)    ,    திருமதி உமாபாஸ்கரி மயில்வாகனம் (கல்முனை வெஸ்லி பாடசாலை ஆசிரியர்  ) தம்பதிகளின் புதல்வராவார் .

முதலிடம் பெற உறுதுணையா இருந்த பெற்றோர் , அதிபர் , ஆசிரியர்கள் அனைவருக்கும் தமது நன்றியினை தெரிவிப்பதாக கூறினார் .