வாகரையில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்வு

 (ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் 01.01.2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் உட்பட சகல பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்;டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் பாடசாலைசெல்கின்ற 07 விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.