கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

செவ்வாய்க்கிழமை (05-01-2016) கிழக்கு மாகாண சபையின்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் விவசாயத் துறை அமைச்சர் கௌரவ துரைராஜசிங்கம், கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனார்த்தனன், விவசாய பிரதிப் பணிப்பாளர், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், லோகராஜா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்- மூதூர்)  கி.மா விவசாய அமைச்சின் செயலாளர் தர்சன் மற்றும் பல அரச உயரதிகாரிகளுடன் தி.மூ.கிளிவெட்டி மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து மூதூர் வலய பாடசாலைகளின் ஐந்து பின் தங்கிய பொருளாதார பின்னணியைக் கொண்ட குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளையும், கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தனர்.