ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான சைக்கிள் பந்தையப்போட்டி.

(சுபஜன்)
மட்.ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்காக சைக்கிள் பந்தையப்போட்டி இன்று (25)காலை இடம் பெற்றது. இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் , உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஏறாவூர் 4 சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதான வீதியில் ஆரம்பமான இன் நிகழ்வு தன்னாமுனை வரை சென்று மீண்டும் ஏறாவூர் 4 பிரதான வீதியீனூடாக சென்று ஏறாவூர் புகையிரத வீதியீனூடாக பாடசாலையை வந்தடைந்தது. இப் போட்டியானது இம் முறையே முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமையும், இனி வரும் காலங்களிலும் நடைபெறும் எனுவும் பாடசாலையின் அதிபர் திரு.S.உதயன் தெரிவித்தார்.