கைசுத்தமான அதிகாரிகளின் கைகளை கட்டிப்போடும் விதமாக இத்தகைய கீழ்த்தரமான
செயல்களை மேற்கொள்ளும் கயவர்கள் இனங்காணப்பட்டு உடனடியாக சட்டத்தின் முன்
நிறுத்தப்படவேண்டும்.
இத்தகைய மிரட்டல்களில் இருந்து எதிர்காலத்தில்
நேர்மையான அரச அதிகாரிகளும், அலுவலர்களும் பாதுகாக்கப் பட வேண்டும். என்று
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார் .
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நாவற்குடா, மேல்மாடி வீதியில் வசிக்கும் சுகாதார பரிசோதகர் சங்கர் அவர்களின் வீட்டில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இது தொடர்பாக சம்பவவிடத்தை நேரில் சென்று பார்வையிட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.