(ஷமி.மண்டூர்)
ஏறாவூர்பற்று பிரதேச செயலக பொங்கல் விழா 19 செவ்வாய்க்கிழமை பன்குடாவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து பன்குடாவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமும் விவேகானந்தா அறநெறிப் பாடசாலையும் பன்குடாவெளி கிராம அபிவிருத்தி சங்கமும் நடாத்தியது.

இவ்விழாவில் பன்குடாவெளி கிராம மக்களும் பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ்விழாவிற்கான பூசை நிகழ்வுகள் பன்குடாவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடாத்தப்பட்டதுடன், பாரம்பரிய கலை நிகழ்வுகளான கிராமிய நடனம், கிராமிய பாடல் என்பனவும், பாரம்பரிய விளையாட்டு விளையாட்டுகளான கட்டப்பந்து வீசுதல், பார் ஓட்டம், சுரைக்காய் இழுத்தல் போன்றனவும் பன்குடாவெளி ஸ்ரீ சிவ முத்து மாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சந்திரக்குட்டி ஏகாம்பரம் மற்றும் நாகராசா நாகேஸ்வரன் ஆகியோரும் பன்குடாவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிருவாகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
கலை நிகழ்வுகள் அனைத்தும் விவேகானந்தா அறநெறிப் பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டதுடன், விளையாட்டு நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களும், பன்குடாவெளி பொதுமக்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மூச்சுப் பயிற்சி நிகழ்வானது பிரதேச செயலக திட்டமிடல் பிரவி அபிவிருத்தி உதவியாளர் தி.ஜீவபூரணி அவர்களால் நடாத்தப்பட்டது.