கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதாக மக்கள் விசனம்

(படுவான் பாலகன்) களுவாஞ்சிகுடி மின்சாரசபைக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அடிக்கடி முன்னறிவித்தல்கள் இன்றி மின்சாரம் தடைப்படுவதாக பிரதேச மக்கள் மற்றும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாதமொன்றிற்கு ஆறு தடவைகளுக்கு மேல் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதனால் வர்த்தக நிலையங்களை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும், அதே போன்று மக்களும் தமது அன்றாட காரியங்களில் ஈடுபடுவதிலும் சிரமங்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கடந்த வருடத்தில் இருந்த அதேநிலை புதுவருடம் பிறந்தும் இவ்வருடத்திலும் இந்நிலை காணப்படுவதாகவும் இதற்கான உரிய தீர்வை வழங்குமாறும் பிரதேசமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.