மின்சாரம் துண்டிப்பு
திருகோணமலை -கிண்ணியா பகுதியில் பிரதான மின் கம்பத்தில் புதிய மின் கம்பிகளை பொருத்த வேண்டியுள்ளதால் நாளை வியாழக்கிழமை (21) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக கிண்ணியா பிராந்தியத்துக்கு பொறுப்பான மின் அத்தியட்சகர் எஸ்.எச்.ஷானக தெரிவித்தார். ஆலங்கேணி, சம்மாச்சந்தீவு, பூவரசன்தீவு மற்றும் இடிமன் போன்ற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.













