கிழக்கு பல்கலைக்கழக அழகியல் கற்கை நிறுவகத்தின் பட்டிப்பொங்கல் நிகழ்வு

(படுவான் பாலகன்) கிழக்கு பல்கலைக்கழக அழகியல் கற்கை நிறுவகத்தின் ஏற்பாட்டில் பட்டிப்பொங்கல் நிகழ்வு நேற்று(16) சனிக்கிழமை கல்லடியில் இடம்பெற்றது.

நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பாரம்பரிய பாடல்களும் இசையோடு பாடப்பட்டது. 

இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், விவசாயி கள்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.