(கதிரவன்)தம்பலகாமம் ஆதிகோணைநாயர் கோயிலடியில் பயணிகள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் பகுதியில் இருந்து செல்லும் பயணிகள் பேரூந்து வரும் வரை வெயில் மழை என்பனவற்றில் இருந்து இதன் மூலம் பலனடையமுடியும்.
மறைந்த தம்பலகாமம் கிராமசேவையாளர் குருகுலசிங்கம் குணரெத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக அன்னாரது குடும்பத்தினரால் இது அமைத்துக் கொடுக்கிப்பட்டுள்ளது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி இதனை வைபவ ரீதியாக வெள்ளிக்கிழமை 08.01.2016 திறந்து வைத்தார். இந்நிழ்வில் மறைந்த கிராம சேவையாளரது குடம்பத்தினரும், உறவினர்களும் பொது மக்களும் அரச அலுவலகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


















