திருக்கோவில் பொலிஸ் பிரிலிலுள்ள தாண்டியடி வயல் பிரதேசத்தில் வயலில் வேளாண்மை காவலுக்குச் சென்ற விவசாயி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலாமாக இன்று(21) வியாழக்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் கொலை தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்
தாண்டியடி சங்கமம்கிராமம் பீச் வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான தங்கவேல் குணசேகரம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமைபோல தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்தியடியிலுள்ள வயலில் வேளாண்மை காலலுக்காக சம்பவதினமான இரவு சென்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதிகாலை 2.00 மணியளவில் குறித்த நபரை குடும்ப பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டைச் சோந்த நபர் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பவிசாரணையில’; தெரியவந்துள்ளது .
இதனையடுத்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் hர்













