கல்முனையில் வெளிநாட்டு வைத்திய நிபுணர்களின் இலவச வைத்திய சிகிச்சை முகாம்;

(ரவிப்ரியா)
கல்முனை ரோட்றி கழகம் 3220 அழைப்பின் பேரில் காது , மூக்கு, தொண்டைக்கான  வெளிநாட்டு விசேட வைத்திய நிபுணர்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இம்மாதம் 13ந் திகதி   தொடக்கம் 17ந் திகதிவரை இலவச சிகிச்சை முகாம் ஒன்றை நடாத்த இருக்கின்றனர். இச் சிகிச்சை முகாமை கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை என்பன இணைந்து நடாத்துகின்றன. வைத்திய சிகிச்சை தேவையானோர் குறித்த இரு வைத்தியசாலை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.