(சசி)குறுமண்வெளியைச் சேர்ந்த மாணவன் நவரெத்தினம் கஜாந் அவர்கள் மட்/ பட்/ குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் தோற்றி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவர் தனது பெற்றார்கள் யோகேஸ்வரி, நவரெத்தினம் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், பாடசாலை ஆசிரியர்கள், தனியார் கல்வி ஆசிரியார்கள் மற்றும் நண்பர்கள் ,ஆகியோருக்கும் முக்கியமாக ஆசிரியர்கள் பிரபாகரன், நவநிதன், அனோஜன், கோகிலன் ஆகியோருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
அவருக்கு வற்றி நீயூஸ் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.















