செங்கலடி கொம்மாதுறையில் விபத்து சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்.


(செங்கலடி நிருபர்)
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கொம்மாதுரை  பிரதான வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (02) மாலை 7 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. வாழைச்சேனை இருந்து ஏறாவூர் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. பயணித்துக்கொண்டிருக்கும் போது திடீரென வீதியின் குறுக்கே மாடு வந்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த  பேரூந்தில் மோதுன்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. பேரூந்து காத்தான்குடி போக்குவரத்து சாலைக்கு சொந்தமான பேரூந்தாகும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஏறாவூர் 5ம் குறிச்சியைச் சேர்ந்த மயில்வாகணம் (62 வயது) என்பவரே பலத்த காயங்களுடன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரனணகளை மேற்கொண்டு வருகின்றனர்






.