வந்தாறுமூலையில் முச்சக்கரவண்டி விபத்து

 (சுபஜன்)
வந்தாறுமூலை பிரதேசத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒரு வயதுக் குழந்தையொன்று உட்பட ஆறு பேர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனையிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகிச்சென்று, வீதியின் வலது புறமாகவுள்ள மதகு ஒன்றினுள் குடைசாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.