(விஜி)மட்டக்களப்பு, மண்முனை மேற்கு நாவற்காடு தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக வருடந்தோறும் நடாத்தப்படும் தைப்பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சி இம்முறையும் 15.01.2016 ஆம் திகதி தைப்பொங்கல் அன்று நாவற்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முன்றலில் நாடத்தப்பட்டது.
இவ் நிகழ்வில் முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், எலி ஓட்டம், முயல் ஓட்டம், தேசிக்காய் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் என இன்னும் பல கிராமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் ஆலயத் தலைவர் திருமேனி, ஆலய பிரதமகுரு தனராஜா, ஆலய உப தலைவர் திருச்செல்வம், செயலாளர் ரகுவரன், பொருளாளர் குமாரசிங்கம் ஆகியோர் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பல பொதுமக்கள் கலந்துகொண்டு போட்டிகளில் பங்குபற்றி பரிசுகளை வென்று சென்றனர்.


















