மட்டக்களப்பு இந்து குருமார் பேரவையும் வட்டவான் சித்திவிநாயகர் அறநெறி பாடசாலையும் இணைந்து பொங்கல் விழா


(விசேட நிருபர்)
மட்டக்களப்பு இந்து குருமார் பேரவையும் வட்டவான் சித்திவிநாயகர் அறநெறி பாடசாலையும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (17.01.2016) வாகரை பிரதேசத்திலுள்ள வட்டவான் கலைமகள் வித்தியாலயத்தில் தைப்பொங்கல் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.



இதன்போது மட்க்களப்பு இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ த.சிவகுமார் குருக்கள் செயலாளர் சிவஸ்ரீ த.பாலச்சந்திரன் குருக்கள் வாழைச்சேனை இந்து மகாசபை தலைவர் பெ.புண்ணியமூர்த்தி பாடசாலை அதிபர் நா.மாகாலிங்கம் மற்றும் வட்டவான் கிராம அபிவிருத்தி சங்த் தலைவர் கி.சுரேஸ் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.


இந் நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இந்து குருமார் பேரவையினால் வழங்கி வைக்கப்பட்டது.