26.01.2016 அன்று இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களினால் கொண்டுவரப்பட்ட தனி நபர் பிரேரணை தொடர்பிலும், அது தொடர்பில் அவதூறாக செய்தி இணையம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பிலும் மாகாண சபை உறுப்பினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.
அவ் அறிக்கையில்,
எனது முயற்சியில் கல்முனை, பாண்டிருப்பில் அமையபெறவுள்ள ஆயுர்வேத மருந்தகம் தொடர்பில் " மூக்கை நுளைத்து பெயர் எடுக்க முனையும் மாகாண சபை உறுப்பினர்" என்னும் தலைப்பில் இணையதளம் ஒன்றில் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக அமைப்பு என் மீது அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளமையை இட்டு மிகவும் மன வேதனை அடைகின்றேன்.
நான் கடந்த மாதங்களில் உடல் நலக்குறைவால் மாகாண சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாமையையிட்டு என்னால் ஆயுர்வேத மருந்தகம் தொடர்பில் கொண்டுவரப்பட இருந்த தனி நபர் பிரேரணை சற்று காலதாமதமாக சென்ற அமர்விலேயே என்னால் தனி நபர் பிரேரணை முன்வைக்கப்பட்டத்து. இது சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாகாண சுகாதார அமைச்சரினால் அதற்கான நிதியும் ஒதுக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைக்க சபையிடம் முன்னமே அனுமதி பெற்றே முன்வைக்க முடியும், அதன் பிரகாரமே பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இது எமது பிரதேச மக்களுக்கு என்னால் கொண்டுவரப்பட்ட தனி நபர் பிரேரணை, 23.10.2015 ம் திகதிய தனி நபர் பிரேரணை தொடர்பான கடிதத்தின் பிரகாரமே இப்பிரேரணை மாகாண சபையில் முன்வைக்கப்பட்டது. அது கடந்த மாகாண சபை அமர்வின் நிகழ்ச்சி நிரலிலும், உரையின் முழு எழுத்து ஹண்ட் சார்டிலும் உள்ளது. ஆகவே மக்கள் நலனுக்காக சேவை ஆற்றுங்கள், இல்லையேல் சேவையாற்றுபவர்களை சேவையாற்ற விடுங்கள்.
எமது மக்களுக்கு சேவையாற்றுவதயே நோக்காக கொண்டிருக்கும் என்னை, இது போன்ற செய்திகள் மிகுந்த வருத்தமளிப்பதுடன், பாண்டிருப்பில் ஆயுர்வேத மருந்தகம் விரைவில் அமையப்பெறும் என்றும் உறுதியளிக்கின்றேன்.
என்று, மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களினால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.