மட்டக்களப்பு இந்து
இளைஞர் மன்றத்தினால் நடாத்தப்பட்டு வரும் சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்திலுல்ல
முதியோர்களால் இவ்வருடமும் 50 சிறுவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகளும்
கற்றல் உபகரனங்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்து இளைஞர் மன்றதலைவரும்
முன்னாள் கல்விப்பணிப்பாளருமான திருமு.பவளகாந்தன் அவர்களின் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் மன்ற பொதுச்செயலாளர் திரு.சாரங்கபாணிஅருள்மொழி
அவர்களும் கலந்துகொண்டார். முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும்
முதியோர்களால் சிறுவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பு நிகழ்வாகஅமைந்தது.