அதிகாரிகளின் ஒத்துழைப்பு சரியாக இருந்தால் நாம் எவ்வளவோ விடயங்களை மக்களுக்குச் செய்துவிட முடியும்..

அரச அதிகரிகளின் ஒத்துழைப்பு சரியாக இருந்தால் எம்மால் எவ்வளவோ செய்ய முடியும். எமக்கு அதிகாரிகளை அடிபணிய வைத்து கமையாற்றச் செய்வதில் எவ்வித உடன்பாடும் இல்லை ஆனால் அதிகாரிகள் அவ்வாறானதொரு நிலையினை ஏற்படுத்தவதைத் தவிர்த்து தங்கள் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும். என்பதே எனது ஆசை என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்

பிறந்துள்ள புதுவருடப் பிறப்பினை சிறப்பிக்கும் முகமாக திருகோணமலையில் இடம்பெற்ற அமைச்சரின் அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் அரச இயந்திரத்தை இயக்குகின்றவர்கள் நிர்வாகிகள் அரசியல்வாதிகள் கொள்கைகளை வகுப்பவர்கள் மக்களின் அபிலாசைகளை அறிந்து அதற்கேற்ற விதத்தில் கொள்ளைகளை ஏற்படுத்துபவர்கள்.மேற்குலக நாடுகளில் நிர்வாகிககள் தங்கள் கடமைகளை தாங்களே மேற்கொள்வார்கள் அதில் அரசியல்வாதிகள் எவ்விதத்திலும் தலையிடுவதில்லை.

அவ்வாறு தலையீடு செய்யும் அளவிற்கு அரச அதிகாரிகள் நடந்துகொள்ள மாட்டார்கள்.நான் இந்த அமைச்சினைப் பொறுப்பேற்கும் போது பாரிய கனவுகளுடன் வந்தேன். நாங்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு அதிகாரிகள் மனமுவந்து ஒத்துழைப்பு தந்து அவற்றை திறம்பட  மேற்கொள்வார்கள். அதில் எவ்வித குறைபாடுகளும் இருக்காது என்று எமது அமைச்சின் அதிகாரிகளைப் பொருத்த மட்டில் அந்த கனவு சற்று பலித்திருப்பதாக உணர்கின்றேன்.

என்னுடைய அமைச்சின் அதிகாரிகள் பற்றி இதுவரையில் எனக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுரத்தவரையில் நாங்கள் இதுவரையில் எமது மக்களின் அபிலாசைகள் மற்றும் உரிமை பற்றிய விடயங்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி இருந்தோம், இப்போதும் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.

எமது அரசியல் தீர்வு விடயங்களில் ஆராய்ந்து செயற்பட்டு வந்தமையால் செயற்பாட்டு நிர்வாகம் தொடர்பில் உரித்தான அனுபவம் அதிகளவில் கிடையாது.அரச அதிகரிகளின் ஒத்துழைப்பு சரியாக இருந்தால் எம்மால் எவ்வளவோ செய்ய முடியும். எமக்கு அதிகாரிகளை அடிபணிய வைத்து கடையாற்றச் செய்வதில் எவ்வித உடன்பாடும் இல்லை.

ஆனால் அதிகாரிகள் அவ்வாறானதொரு நிலையினை ஏற்படுத்தவதைத் தவிர்த்து தங்கள் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும்
என்பதே எனது ஆசை. எமது தனிப்பட்ட குடும்ப கடமைகளை நாம் எவ்வளவு கண்ணும் கருத்துமாக கரிசனையுடன் செய்கின்றோம் அது போல் எம்மை நாடி வரும் பொது மக்களின் கடமைகளையும் மனதில் எண்ணிச் செயற்படுத்த
வேண்டும்.

நாம் ஒவ்வவொரு வருட ஒதுக்கீட்டிலும் ஒதுக்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை என்று சொல்லுகின்றோம் ஆனால் ஆண்டு இறுதியில் எல்லா இடத்திலும் நிதிகள் திரும்பிச் செல்கின்றதை நாம்
அவதானிக்கின்றோம். இது எமது பட்டறிவுகளுக்கும் படிப்பறிவுகளுக்கும் ஏன் எட்டுவதில்லை. இது பற்றி நாம் சிந்தித்தே ஆகவேண்டும்.

நாம் மேற்கொள்ளும் காரியங்களில் நல்ல பயனை எதிர்பார்த்து மேற்கொள்வோமானால் பலனும் நல்லதாக அமையும். இலக்கைப் பார்த்துக் கொண்டு சென்றால் எமது இலக்கினை அடைய முடியாது அதற்கான ஆரம்ப
திட்டங்களை ஒழுங்காக மேற்கொண்டாலே எமது இலக்குகளை எளிதில் அடைந்து விட முடியும். எனவே எமது கடமைகளை செய்தாலே போதும் இலக்கு தானாக அடையப்பட்டு விடும்.

திட்டமிட்ட படி திட்டத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்வோமானால் அதுவே எமது வெற்றிக்கு வழிவகுக்கும்.எமது அமைச்சின் மூலம் இந்த பிறந்திருக்கும் புதிய ஆண்டுக்கான செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம். எனது அதிகாரிகள் எனக்கு ஒரே ஒரு உதவியினை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும்.

எனக்கு இந்த அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லை. ஆனால் இருக்கின்ற காலத்தில் மேற்கொள்கின்ற விடயத்தை சரியாக மக்களுக்கு நன்மை பயக்கின்ற வகையில் நன்றாகச்  செய்துவிட்டு செல்ல வேண்டும் அதுவே எனது அவா அதற்கு எமது அதிகாரிகள் தான் எனக்கு உதவ வேண்டும். பிறக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்தார்.