(சுகிவர்ணன், வரதன்)
உழவர் தினத்தை முன்னிட்டு, தைமாதத்தினை வரவேற்று சூரியனுக்கு வணக்கம் செலுத்தும்முகமாக, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இப் பிரதேச சமூகமட்ட அமைப்புகக்களும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா இன்று ( 22 ) பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் இடம்பெற்ற இவ் விழாவில் 62 பானைகள் வைத்து பொங்கப்பட்டது.
இந் நிகழ்வின்போது பிரதேச செயலக வெற்றி வினாயகர் ஆலயத்தில் விசேட பூசையும், தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன். மண்முனை மேற்கு பிரதேசசபை செயலாளர் செல்வி புத்திசிகாமணி உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.