(ரவிப்ரியா)
புதிய அரசு வேலையற்று இருந்த பட்டதாரிகள் 2590 பேருக்கு கடந்த 12ந் திகதி உதவி அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கி பயற்சி பட்டதாரிகளாக அரச சேவையில் இணைத்துக் கொண்டது. இதில் கிழக்கில் 242 பேருக்கு நியமனம் கிடைத்தது. நியமனம் பெற்றவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
எல்லோருக்குமே கொழும்பில் உள்ள அமைச்சுக்களிலேயே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பல அமைச்சுக்களிலும் விடுவிப்பு கடிதம் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். பலர் இன்னமும் கடமை ஏற்காமல் கொழும்பிலேயே தங்கியிருந்து அமைச்சுக் காரியங்களுக்கு அலைந்து திரிகின்றனர். சில அமைச்சுக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கருகில் உள்ள காரியாலயங்களில் வெற்றிடம் இருந்தால் அதை உறுதிப்படுத்தி கடிதங்களுடன் வந்தால் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
ஏனைய அமைச்சுக்களில் நிரந்தரமாக கொழும்பில் தங்கியிருந்து பணிபுரிய வேண்டிய நிர்க்கதி நிலை குறித்து நிவாரணம் கோரி நிற்கின்றனர்.
ஏனெனில் கொழும்பில் தங்கியிருந்து பணிபுரிவதற்கு அரசினால் வழங்கப்படும் ரூபா பத்தாயிரம் போதுமானதாக இல்லை என்ற யதார்த்த நிலையைச் சுட்டிக் காட்டுகின்றனர். வாடகை, பிரயாணம், உணவு என்பவற்றை எப்படிச் சமாளிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்புகின்றனர்.
எனவே அரசு சொந்த இடங்களில் பணிபுரிவதற்கான ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













